வேகமாக பகிருங்கள்!காது வலியை நொடியில் குணப்படுத்தும் கொன்றை..!

👇👇👇👇👇
பச்சைநிறமே பச்சைநிறமே இச்சை மூட்டும் பச்சைநிறமே…’ இது, அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற பாடல். அதில், ‘தங்கத்தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப்பூவில் குளித்த….’ என்ற வரி இடம்பெறும். அந்த அளவுக்கு இன்றைய நூற்றாண்டு மனிதர்கள் மத்தியிலும் பிரபலமாகியிருக்கிறது கொன்றை மலர் என்னும் சரக்கொன்றை. அவ்வை மூதாட்டி கொன்றை வேந்தன் எனும் பெயரில் அறநூல் ஒன்றை இயற்றினார். கொன்றை மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன் என்றும், அவரது மகன்களுள் ஒருவரான முருகனைப்போற்றியும் இந்நூலில் போற்றிப் பாடப்பட்டுள்ளது.
கொன்றை… ஃபேபேசியே (Fabaceae) என்னும் தாவரவியல் குடும்பத்தைச்சேர்ந்த பூக்கும் தாவரம். கொன்றையில் சரக்கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, கருங்கொன்றை, மஞ்சள்கொன்றை, மயில்கொன்றை, புலிநகக்கொன்றை, பெருங்கொன்றை, மந்தாரக்கொன்றை மற்றும் முட்கொன்றை எனப் பல கொன்றைகள் இருந்தாலும் சரக்கொன்றைதான் மிகவும் பிரசித்திபெற்றது. சரம் + கொன்றை = சரக்கொன்றை. சிவன் கோவில்களில் தல மரமாக விளங்கும் சரக்கொன்றையை இதழி, கடுக்கை, கொன்னை, தாமம் என்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள்.
கோடைக் காலங்களில் குறிப்பாகச் சித்திரை மாதத்தில் சரம் சரமாகப் பூத்துக்குலுங்குவதால் சரக்கொன்றையைச் சித்திரைப்பூ, திருக்கொன்றை, சுவர்ண புஷ்பம் என்றும் அழைக்கிறார்கள். கோடையின் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய சரக்கொன்றை மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும். ஓரடி நீளத்துக்கும் அதிகமாக வளரக்கூடியது. பூச்சரங்கள் பொன்னிறமாக ஜொலிக்கும். புத்தாண்டில் சரக்கொன்றை மலரைப் பார்ப்பதால், வாழ்வில் வளம் கூடும் என்பது நம்பிக்கை. கேரளாவிலும் விஷுக்கனி தரிசனத்தில் கொன்றை மலர் இடம்பெறுகிறது. சரக்கொன்றையின் பூ, இலை, மரப்பட்டை என அனைத்துக்கும் மருத்துவக்குணங்கள் உள்ளன.
சரக்கொன்றைப்பூவை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி இரண்டு சொட்டுகள் காதில் விட்டுவர காது நோய்கள் குணமாகும்.
Must share your friends.

Post a Comment