Header Ads

15 வயது மாணவியை கர்ப்பிணியாக்கிய ஆசிரியர் - பரபரப்பு பின்னணி..

15 வயது மாணவியை கர்ப்பிணியாக்கிய ஆசிரியர் - பரபரப்பு பின்னணி..


தான் கற்றுக் கொடுக்கும் பாடசாலையிலேயே 15 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய ஆசிரியர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரான ஆசிரியர் 3 பிள்ளைகளின் தந்தையென தெரியவந்துள்ளது.

அந்த மாணவியை இரண்டு வருடங்களாக ஏமாற்றி குறித்த ஆசிரியர் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குறித்த மாணவியை பல நாட்கள் தனது மோட்டார் வாகனம் மற்றும் உந்துருளியில் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி அந்த மாணவியை தனது வீட்டுக்கே அழைத்துச் சென்றுள்ள நிலையில் அங்கு அவரது பிள்ளைகளும் இருந்துள்ளன.

சில நாட்களுக்கு பின்னர் தனது உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாக அந்த மாணவி ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

பின்னர் கடந்த மே மாதம் 6 ஆம் திகதி அவர் தனது மனைவியுடன் வந்து மருத்துவ பரிசோதனைக்காக சிறுநீர் மாதிரியை பெற்று சென்றதாக அந்த மாணவி காவற்துறையிடம் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனையில் அந்த மாணவி கர்ப்பிணியாக உள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்த ஆசிரியருக்கு குறித்த மாணவியின் வயதில் பெண் பிள்ளையொன்றும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

No comments