Header Ads

பிரபல நிகழ்ச்சியால் மீண்டும் சர்ச்சை… லட்சுமி ராமகிருஷ்ணன் அம்பலமாக்கும் உண்மை!!

பிரபல நிகழ்ச்சியால் மீண்டும் சர்ச்சை… லட்சுமி ராமகிருஷ்ணன் அம்பலமாக்கும் உண்மை!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி பல நேரங்களில் சர்ச்சை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்த விடயமே. சமீபத்தில் மீண்டும் அந்த நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்

சமீபத்தில் ஒளிபரப்பான குழந்தை மீதான பாலியல் வன்முறை மற்றும் தாக்குதல் சம்பந்தப்பட்ட பகுதி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அந்நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனை அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக சாடினார்கள். அனைவரது கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சி குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது:
சமீபத்தில் ஒளிபரப்பான பகுதியில், பாதிக்கப்பட்ட பெண் குழந்தையைப் பெற்ற பின், அந்தப்
பெண்ணின் குடும்பம் சம்பந்தப்பட்ட நபர் மீது 7 வருடங்களுக்கு முன்னால் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றது. தவறு செய்தவர் நிதியுதவி செய்வதாக கூறியுள்ளார்.

அந்தப் பெண் போலீஸுக்கு செல்லாமல் குற்றத்தை வெளியில் கொண்டு வர வேண்டும் என சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்தார். இந்த நிகழ்ச்சி இல்லையென்றால் அவர் அமைதியாக பாதிப்பை சந்தித்து கொண்டே இருந்திருப்பார். குற்றவாளியும் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி வாழ்ந்திருப்பார்.

அந்தப் பெண் இப்போதும் புகாரளிக்க மறுத்துவிட்டது உண்மைதான். எங்களால் அவரை சமாதானப்படுத்த முடியவில்லை. ஆனால் குற்றம் வெளியே வந்தது. சிறிய விழிப்புணர்வு உண்டாக்க முடிந்தது. முக்கியமாக, குற்றவாளிக்கும், அவரைப் போன்றவர்களுக்கும் இனி குற்றம் வெளியே வரும் என்ற பயம் இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் இப்படி பொது ஊடகத்தின் முன் வந்துவிடுவார்கள் என்பது தெரியும்.

அந்த சூழலில் எது சரியானதோ அதை செய்தோம். அப்படியான பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை விட, சென்று முறையிட வேறு எளிய நடைமுறைகள் வரும்போது இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரும்.

நிகழ்ச்சியை குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு நமது சமுதாயத்தில் வேறொரு மாற்று தளத்தை உருவாக்க உழைக்குமாறு அவதூறு சொல்பவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அன்று நம் சமுதாயத்துக்கு சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சி தேவைப்படாது” என்று தெரிவித்துள்ளார்.

No comments